டென்மார்க் நாட்டில் நடைபெறும் வானிலை மாற்றம் குறித்த சி-40 மாநாட்டில் இந்தியாவில் இருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அம்மாநில நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகிம், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்க இருந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகிமுக்கு மாநாட்டில் பங்கு பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து அரசியல் அனுமதி கிடைத்தது.ஆனால், அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அதை வழங்காததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அம்மாநாட்டில் டெல்லியில் முன்பைக் காட்டிலும் தற்போது 25 சதவீதம் மாசுக் காற்றை கட்டுப்படுத்தியுள்ளது குறித்து, அர்விந்த் கெஜ்ரிவால் உரையாற்ற இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவருக்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.