ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பிட்டன் மக்களை அழைத்து வர பாதுகாப்பு படை அனுப்பப்படவுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனிடையே கடந்த வாரத்தில் 11 முக்கிய மாகாணங்களின் தலைநகரையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் கைப்பற்ற முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் கைப்பற்றிய 6 நகரங்களில் இருக்கும் சிறைக் கைதிகளையும் விடுவித்துள்ளனர்.
இதனிடையே பிரிட்டன் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பிரித்தானியர்கள் நாடு திரும்புமாறு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் பாதுகாப்புச் செயலாளர் பென் வாலெஸ் 4000 அதிகமான பிரிட்டன் மக்கள் அங்கே சிக்கி இருப்பதாக தகவல் வந்ததால் அவர்களை அழைத்து வர 600 பாதுகாப்பு படையினரை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.