தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.
தமிழகத்தின் நிதித்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. திருவண்ணாமலை, நெல்லை, விருதுநகர், நாமக்கல், தேனி, சிவகங்கை, விழுப்புரம், நாகையில் புதியதாக சிப்கார்ட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். காஞ்சியில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, தூத்துக்குடியில் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை, ராணிப்பேட்டையில் தோல் பொருள் உற்பத்தி பூங்கா, தேனி திண்டிவனத்தில் உணவு பூங்கா, திருவள்ளூர் மாநல்லூரில் மின் வாகன பூங்கா, ஓசூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.