அமெரிக்காவில் குப்பையில் கிடந்த அலமாரியின் ட்ராயருக்குள் பிறந்த குழந்தை கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள Illinois என்ற மாகாணத்தில் இருக்கும் சிகாகோ நகரில் குப்பைத்தொட்டியின் அருகில் ஒரு அலமாரி கிடந்திருக்கிறது. அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் அதனை திறந்து பார்த்திருக்கிறார். அதில் பிறந்த குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
உடனடியாக, மருத்துவ உதவிக்குழுவினருக்கு தொடர்பு கொண்டு குழந்தையை ஒப்படைத்திருக்கிறார். அந்தப் பெண் இது குறித்து கூறுகையில், அந்த வழியாக சென்ற போது தெருவோரத்தில் கிடந்த அலமாரியை பார்த்ததாகவும், அதனை வீட்டுக்கு கொண்டுச்சென்று உபயோகிக்கலாம் என்று கருதி, அருகில் சென்றபோது அதில் பிறந்த பச்சிளம் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், அலமாரிக்குள் ஜெபமாலை மணிகளை வைத்து மூடப்பட்ட நிலையில் குழந்தை இருந்தது என்றும் கூறியிருக்கிறார். இந்த குழந்தை பிறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். தற்போது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். குழந்தை தொடர்பான தகவல்களை அறிய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.