Categories
சினிமா தமிழ் சினிமா

‘பூவே உனக்காக’ சீரியலில் வில்லியாகும் தனுஷ் பட நடிகை… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகை சாயாசிங் பூவே உனக்காக சீரியலில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் சாயாசிங். இந்த படத்தில் தனுஷ், சாயாசிங் இருவரும் நடனமாடிய ‘மன்மத ராசா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இதைத் தொடர்ந்து நடிகை சாயாசிங் கடந்த 2011-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நாகம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். மேலும் இவர் தெய்வமகள் சீரியலில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.

இதன்பின்  கிருஷ்ணா, சாயாசிங் இருவரும் ரன் சீரியலில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் சாயாசிங் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அதில் இந்த சீரியலில் நடிகை சாயாசிங் வில்லியாக நடிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியலில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் காட்சிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |