இங்கிலாந்து அறிவித்த EU settelement scheme என்ற திட்டத்தில் காலதாமதமாக விண்ணப்பித்த 58,000 பேரின் விண்ணப்பங்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா என்ற அச்சத்தில் அவர்கள் ஆழ்ந்துள்ளார்கள்.
இங்கிலாந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து தங்கள் நாட்டிற்குள் வாழ விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை சேர்ந்தவர்கள் தாங்கள் உருவாக்கிய EU settelement scheme என்னும் புதிய திட்டத்தில் விண்ணப்பிக்கும் படி இங்கிலாந்து அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு ஜூன் மாதம் 30ஆம் தேதி கடைசி என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 58,000 பேர் காலதாமதமாக இந்த புதிய திட்டத்தில் விண்ணப்பித்துள்ளார்கள். இதனால் இவர்களுடைய விண்ணப்பங்களை இங்கிலாந்து அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா என்னும் அச்சத்தில் அந்த 58,000 பேரும் உள்ளார்கள்.
அதிலும் சிலர் இதுவரை இந்த புதிய திட்டத்தில் விண்ணப்பிக்காமல் கூட இருக்கிறார்கள். இவ்வாறு அந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்காமல் இருப்பவர்களின் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.