Categories
சினிமா தமிழ் சினிமா

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர்…. வெப்சீரிஸில் நடித்துள்ளாரா…. வெளியான புதிய தகவல்….!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் வெப்சீரிஸில் நடித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சேனலில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. மேலும் பாரதிகண்ணம்மா சீரியல் நாயகி கண்ணம்மாவின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அதேபோல் பாரதியாக நடித்துவரும் அருணின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. நடிகர் அருண் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு முன் சில தொடர்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு இதுவே மிகப் பெரிய ரீச் கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு நிறைய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் Fiance To Be என்ற அழகான கதை கொண்டு உருவாகியுள்ள வெப்சீரிஸில் நடித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |