Categories
மாநில செய்திகள்

குற்றவியல் நடவடிக்கை – நிதியமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார்.

இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 3 மணி நேரம் வாசித்தார். இந்த உரையில், விலைப்பட்டியல் வியாபாரிகள் உள்ளிட்ட வரி ஏய்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |