Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“ஓஎன்ஜிசி அட்டூழியம்” கருப்பு நிறத்தில் குடிநீர்….. நாகை மக்கள் வேதனை…!!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் தொழில்நுட்ப பணியால் நிலத்தடி நீர் மாசு அடைந்து விட்டதாக பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர்.

நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை அடுத்த பழைய பாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து எண்ணெய்  எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்து அடி பம்பில் தண்ணீர் கருப்பு நிறத்துடனும், துர்நாற்றத்துடனும்  வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related image

மேலும் பழையபாளையம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 8 கிராமங்களில் நிலத்தடி நீரில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்   தெரிவித்த கிராம மக்கள்,  தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் வாரம் ஒருமுறை வரும் கொள்ளிடம் குடிநீரை நம்பி இருப்பதாகவும் கிராம மக்கள் வேதனையுடன்  தெரிவித்தனர்.

Categories

Tech |