சுதந்திர தினத்தன்று 4 சேனல்களில் விஜய்யின் படங்கள் ஒளிபரப்பாக இருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பண்டிகை காலங்கள் மற்றும் விசேஷ தினங்களில் தொலைக்காட்சிகளில் ஹிட் படங்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தளபதி விஜய்யின் திரைப்படங்கள் பல சேனல்களில் ஒளிபரப்ப உள்ளன.
அந்த வகையில் சுதந்திர தினத்தன்று சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு தெறி திரைப்படமும், விஜய் டிவியில் மாலை 3 மணிக்கு துப்பாக்கி திரைப்படமும், உதயா டிவியில் மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் திரைப்படமும், ஜெயா டிவியில் மாலை 6 மணிக்கு கத்தி திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது. எனவே சுதந்திர தினத்தன்று 4 சேனல்களில் விஜய்யின் படங்கள் ஒளிபரப்பாக இருப்பது விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.