Categories
மாநில செய்திகள்

கிராமங்களுக்கு இன்டர்நெட் வழங்கப்படும்…. நிதியமைச்சர் அதிரடி…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார்.

இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 3 மணி நேரம் வாசித்தார். இந்த உரையில், பாரத் நெட் திட்டத்தில் கிராமங்களுக்கு இன்டர்நெட் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தகுதி வாய்ந்த ஊராட்சி அமைப்புகளுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு பாரத் நெட் மூலம் வழங்கப்படும் என்றும், 12,525 கிராமங்களுக்கு 1 ஜிபிஎஸ் அளவில் அலைவரிசை இணைப்பு கண்ணாடி இழைவடம் மூலம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Categories

Tech |