தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.
தமிழகத்தின் நிதித்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதில் தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். விழுப்புரம் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும். கோடியில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா அமைக்கப்படும். சென்னை நந்தம்பாக்கத்தில் 165 கோடியில் நிதி நுட்ப நகரம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.