Categories
மாநில செய்திகள்

TN Budget 2021: பள்ளிகளில் ரூ.20 கோடியில்… ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும்….!!!

தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தின் நிதித்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்துள்ளார். இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை விகிதம் அகில இந்திய அளவில் 27.1% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அது 51% ஆக உள்ளது. 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தையும் கொண்டு நாட்டிலேயே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 865 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 20 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |