Categories
மாநில செய்திகள்

தட்டி கேட்க ஆளில்லை…. குழந்தையை திருடி சென்ற ஜோடி….. வைரலாகும் CCTV வீடியோ…!!

உத்தரப்பிரதேசத்தில் தாயின் அருகே உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை ஒரு ஆணும் பெண்ணும் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

உத்திரபிரதேச மாநிலம் மொகராபாத் பேருந்து நிலையம் ஒன்றில் தாயின் அருகே ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருந்து. அப்போது அங்கு வந்த இருவரில் ஒருவரான ஆண் பாதுகாப்புக்கு நிற்க உடனிருந்த பெண் எந்த பதட்டமும் இன்றி வெகு இயல்பாக சொந்த குழந்தையை தூக்கி செல்வது போல குழந்தையை திருடி செல்லும் காட்சிகள் cctv காட்சிகளில் பதிவாகியுள்ளன.

 

Image result for குழந்தை திருட்டு

அந்த நேரத்தில் மக்கள் சிலரின் நடமாட்டம் தென்பட்டாலும் அவர்கள் சந்தேகப்படாத காரணத்தினாலோ அல்லது கண்டும் காணாமல் நடந்துகொண்டதால் குழந்தை திருட்டு கும்பலை தட்டி கேட்கவில்லை என்பதும் வேதனைக்குரிய ஒன்றாக கருதப்படும் நிலையில், cctv காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் திருட்டு கும்பலை பிடிக்க விசாரணையை தொடங்கியுள்ளனர்.  

Categories

Tech |