இன்றைய தின நிகழ்வுகள்
1385 – அல்சுபரோட்டா சமரில் போர்த்துக்கீசப் படையினர் முதலாம் ஜான் மன்னர் தலைமையில் காஸ்டில் படைகளைத் தோற்கடித்தனர்.
1480 – இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் திருச்சபையினால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
1592 – போக்லாந்து தீவுகளை முதன் முதலாக ஜான் ட்ஃபேவிசு என்ற ஆங்கிலேயர் கண்டார்.
1791 – செயிண்ட் டொமிங்கில் தோட்டப்பகுதி அடிமைகள் வூடூ சடங்கை நடத்தினர். இது எயித்தியப் புரட்சிக்கு வழிவகுத்தது.
1814 – சுவீடன்–நோர்வே போரை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டது.
1816 – டிரிசுதான் டா குன்ஃகா தீவுக்கூட்டம் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. தெற்கு ஆப்பிரிக்காவில் கேப் காலனியில் இருந்து இருந்து இது நிருவகிக்கப்பட்டது.
1842 – அமெரிக்காவில் செமினோலே பழங்குடியினர் புளோரிடாவில் இருந்து ஓக்லகோமாவுக்கு விரட்டப்பட்டனர். இரண்டாவது செமினோலே போர் முடிவுக்கு வந்தது.
1880 – 1248-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கோல்ன் கதீட்ரல் செருமனியின் கோல்ன் நகரில் கட்டி முடிக்கப்பட்டது.
1888 – ஆங்கிலேய இசையமைப்பாளர் ஆர்த்தர் சலிவனின் த லொஸ்ட் கோர்ட் என்ற ஒலிப்பதிவு இலண்டனில் தாமசு அல்வா எடிசனின் கிராமபோன் அறிமுக நிகழ்வில் இசைக்கப்பட்டது.
1893 – வாகனப் பதிவை பிரான்சு உலகில் முதல் நாடாக அமுல்படுத்தியது.
1900 – சப்பான், உருசியா, பிரித்தானியா, பிரான்சு, அமெரிக்கா, செருமனி, இத்தாலி, ஆத்திரியா-அங்கேரி ஆகிய எட்டு நாடுகள் இணைந்து சீனாவின் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.
1912 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்கக் கடற்படையினர் அந்நாட்டை முற்றுகையிட்டது.
1916 – முதலாம் உலகப் போர்: உருமேனியா ஆத்திரியா-அங்கேரி மீது போரை ஆரம்பித்தது.
1921 – தன்னு உரியாங்காலி என்ற புதிய நாடு (பின்னர் துவான் மக்கள் குடியரசு) உருவாக்கப்பட்டது. இது சோவியத் ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.
1936 – ஐக்கிய அமெரிக்காவில் கடைசித் தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர் : ஆறு சப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
1945 – வியட் மின் படைகள் ஆகத்து புரட்சியை ஆரம்பித்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு சப்பான் சரணடைய ஒப்புக் கொண்டது. பசிபிக் போர் முடிவுக்கு வந்தது.
1947 – பாக்கித்தான் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று, பொதுநலவாயத்தில் இணைந்தது.
1958 – தமிழ் மொழி (சிறப்பு அதிகாரங்கள்) சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.[1]
1969 – வட அயர்லாந்துக்கு பிரித்தானிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர். 37 ஆண்டுகள் இராணுவம் அங்கு நிலைகொண்டிருந்தது.
1971 – பகுரைன் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1972 – கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பெர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் உயிரிழந்தனர்.
1980 – போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
2005 – சைப்பிரசில் இருந்து பிராகா நோக்கிச் சென்ற விமானம் கிரேக்கத்தில் மலைகளில் மோதியதில் 121 பேர் உயிரிழந்தனர்.
2006 – செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006: முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை வான்படை நடத்திய விமானத் தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.
2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 334 பேர் கொல்லப்பட்டனர்.
2013 – எகிப்தில் முன்னாள் அரசுத்தலைவர் முகம்மது முர்சியின் ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களை அடக்க அரசு அவசரகால நிலையைப் பிறப்பித்தது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2015 – கியூபாவில் அவானா நகரில் 54 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா தனது தூதரகத்தைத் திறந்தது.
2018 – இத்தாலி, செனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1848 – மார்கரெட் இலிண்டுசே அகின்சு, ஆங்கிலோ-ஐரிய வானியலாளர் (இ. 1915)
1857 – வெ. ப. சுப்பிரமணிய முதலியார், தமிழக கால்நடை மருத்துவர். மொழிபெயர்ப்பாளர், கவிஞர் (இ. 1946)
1867 – ஜோன் கால்ஸ்வர்தி, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1933)
1905 – என். எம். ஆர். சுப்பராமன், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1983)
1911 – வேதாத்திரி மகரிசி, இந்திய ஆன்மீகத் தலைவர் (இ. 2006)
1933 – ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து வேதியியலாளர்
1942 – அங்கையன் கைலாசநாதன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1976)
1948 – அப்துல் காதிர் முல்லா, வங்கதேச அரசியல்வாதி (இ. 2013)
1958 – சாந்தி சச்சிதானந்தம், இலங்கைத் தமிழ் சமூக ஆர்வலர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 2015)
1959 – மேஜிக் ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்ட வீரர்
1966 – ஹாலே பெர்ரி, அமெரிக்க நடிகை
1971 – பிரமோதய விக்கிரமசிங்க, இலங்கைத் துடுப்பாளர்
1983 – சுனிதி சௌஹான், இந்தியப் பின்னணிப் பாடகி
1983 – மிலா குனிஸ், உக்ரைனிய-அமெரிக்க நடிகை
இன்றைய தின இறப்புகள்
1956 – பெர்தோல்ட் பிரெக்ட், செருமானியக் கவிஞர், இயக்குநர் (பி. 1898)
1979 – என். எம். பெரேரா, இலங்கையின் மாக்சியவாதி, அரசியல்வாதி (பி. 1905)
1979 – எட்வர்ட் குபேர், புதுச்சேரியின் 1வது முதலமைச்சர் (பி. 1894)
1984 – காசாபா தாதாசாகேப் சாதவ், இந்திய மற்போர் வீரர் (பி. 1926)
2007 – இராம. திரு. சம்பந்தம், தமிழக ஊடகவியலாளர்
2011 – சம்மி கபூர், இந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1931)
2012 – விலாஸ்ராவ் தேஷ்முக், மகாராட்டிராவின் 14வது முதலமைச்சர் (பி. 1945)
2016 – நா. முத்துக்குமார், தமிழகப் பாடலாசிரியர், கவிஞர் (பி. 1975)