Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“இந்த ஆண்டுக்குள் 25 TARGET” WHATSAPPஐ இப்படியும் USE பண்ணலாம்…… இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு….!!

புதுச்சேரி முத்தரையர் பாளையம் அருகில் ஆய  குளத்தை தூர்வாரும் பணியில் வாட்ஸ்அப் குழு இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விலாச பட்டையில் உள்ள ஏரியை புதுச்சேரி இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்து தூர் வாரினர். இதை தொடர்ந்து நீர் நிலை பாதுகாப்பு குழு என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியில் புதுச்சேரி இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Image result for whatsapp

இதுவரை புதுச்சேரியில் உள்ள 18 குளங்களை இவர்கள் தூர்வாரி உள்ள நிலையில், பத்தொன்பதாவது குளமாக முத்தரையர் பாளையத்தில் உள்ள ஆய குளத்தை தூர்வாரி  வருகின்றனர். இந்த ஆண்டுக்குள் 25 குளங்களை தூர்வார திட்டமிட்டு அதற்கான பணியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு புதுச்சேரியில் உள்ள சில தன்னார்வ நிறுவனங்கள் தாமாக முன்வந்து நிதி உதவி அளித்து உதவி வருகின்றனர்.

Categories

Tech |