9 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வசூலிக்குமாறு நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி அறிவுறுத்தியுள்ளார்.
தர்மபுரி நகராட்சியில் உள்ள நிலுவையில் இருக்கும் குடிநீர், வாடகை மற்றும் சொத்து ஆகிய வரிகளின் பாக்கி 9 கோடி ரூபாய் தொகையை உடனே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது நகராட்சிப் பகுதியில் நிறைவேற்றப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டம் ஆகியவை பற்றி நகராட்சி அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டுள்ளார்.
இதனை அடுத்து நகராட்சிக்கு வரக்கூடிய வரிகள் மற்றும் கட்டணம் ஆகியவற்றை வருவாய் இனங்களின் நிலுவைத் தொகை எவ்வளவு உள்ளது என கலெக்டர் கேட்டுள்ளார். அதன்பின் கலெக்டர் கூறும் போது இம்மாவட்ட நகராட்சியில் நிலுவையில் இருக்கும் வரிகள் மற்றும் கட்டணம் மொத்தமாக பாக்கி இருக்கும் 9 கோடி ரூபாயை உடனடியாக வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். பின்னர் பஞ்சப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழாக பேரூராட்சிகளில் இருந்து நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையான 1 கோடியே 75 லட்சம் ரூபாயை உடனடியாக வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதில் நகராட்சியில் சேர்கின்ற குப்பைகளை உடனடியாக தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து தடகம் கிராமத்தில் இருக்கும் குப்பை கிடங்கில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்துள்ளார். மேலும் தேங்கியிருக்கும் குப்பைகளை தரம் பிரித்து அதனை அழிக்கும் பணியில் தீவிரமாக செயல்படுமாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் அன்னசாகரம் ஏரியை திவ்யதர்ஷினி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.