Categories
உலக செய்திகள்

ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்…. சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!

சுற்றுலா பயணிகளுடன் பயணித்த ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய நாட்டில் Kronotsky என்ற பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியின் மேல்புறத்தில் Mi-8 என்ற ஹெலிகாப்டர் சுற்றுலா  பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 16 பயணிகளும் நீரில் முழ்கி உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் தத்தளித்து கொண்டிருந்த 8 பேரை உயிருடன் மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளித்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காணமல்போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது வரை வெளியாகாததால் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |