Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : பேட்டிங்கில் விராட் கோலி சறுக்கல் …. முன்னேறிய பும்ரா…!!!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்  பவுலர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார் .

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 901 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஸ்மித் 891 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்திலும் , லபுஸ்சேன் 878 புள்ளிகளைப் பெற்று 3- வது இடத்திலும் உள்ளார் . இதில் தற்போது  நாட்டிங்காமில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 846 புள்ளிகளைப் பெற்று 4 – வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டக்-அவுட்  ஆன இந்திய அணி கேப்டன் விராட் கோலி 791 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்திற்கு பின்தங்கி உள்ளார்.

இதையடுத்து இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 764 புள்ளிகளைப் பெற்று 6-வது இடத்திலும் ,ரிஷப் பண்ட் புள்ளிகளை பெற்று 7-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன.இதைத்தொடர்ந்து பவுலர்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலும் ,இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 856 புள்ளிகளைப் பெற்ற 2-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன. அடுத்ததாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 7-வது இடத்திலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் கைப்பற்றிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பெற்றுள்ளார்.

Categories

Tech |