Categories
தேசிய செய்திகள்

2 கிலோ எடை கொண்ட ராட்சத எலுமிச்சை பழம்…. பேக்கரி கடை காரருக்கு அடித்த யோகம்…. வியப்பில் ஆழ்ந்த ஊர் மக்கள்….!!!!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் எச்டி கோட்டை தாலுகா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் சனோஜ் என்பவர் வசித்துவருகிறார். அவர் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். அவர் தனது வீட்டின் கொல்லைப்புறமாக எலுமிச்சை செடி ஒன்றை வைத்துள்ளார். அந்தச் செடியில் 3 எலுமிச்சை பழங்கள் மட்டுமே காய்த்துள்ளது.

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அதன் ஒன்றின் எடை 2 கிலோ 150 கிராம். மற்ற 2 எலுமிச்சை பழங்களும் 2 கிலோ எடையுடன் இருந்துள்ளது. இந்த ராட்சச எலுமிச்சை பழத்தை பார்ப்பதற்கு மக்கள் அனைவரும் அவரின் வீட்டின் முன்பு குவிந்தனர். 2 கிலோ எலுமிச்சை பழம் வாங்கினால் 40 பழங்கள் கிடைக்கும். ஆனால் ஒரே எலுமிச்சை பழம் 2 கிலோ எடையுடன் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |