Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2021: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு…. இதோ முழு விவரம்…..!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று  காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார். இதில், துறைவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம்:

* தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80.26 கோடி ஒதுக்கீடு

* தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி ஒதுக்கீடு

* காவல்துறைக்கு 8.9 கோடி நிதி ஒதுக்கீடு

* நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ. 1,713 கோடி ஒதுக்கீடு

* மீன்வளத் துறைக்கு ரூ. 303 கோடி ஒதுக்கீடு

* குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு

* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு.

* மின்சாரத்துறைக்கு ரூ. 19,872.77 கோடி ஒதுக்கீடு

* பள்ளிக்கல்விக்கு ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு

* உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கீடு

* சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4,142 கோடியாக உயர்வு

* காலநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்துவதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு

* விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு.

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு.

 

Categories

Tech |