சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி . இதை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இடிமுழக்கம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆண்டிப்பட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இடிமுழக்கம் படத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவர் ஜி.வி.பிரகாஷுக்கு தாயாராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததற்காக சரண்யா பொன்வண்ணனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.