Categories
உலக செய்திகள்

இதுல இந்தியாவுக்கும் தொடர்பு இருக்கு..! பிரபல நாட்டில் நடந்த பயங்கரம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் பகதுன்க்வா மாகாணத்தில் புதிதாக கட்டப்படும் அணைக்கான பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி ராணுவத்தினர் மற்றும் சீனப் பொறியாளர்கள் அணைக்கட்டும் பகுதியிலிருந்து பேருந்து ஒன்றில் சென்றுள்ளனர். அந்த பேருந்தில் திடீரென குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இதையடுத்து பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானதால் சீனப் பொறியாளர்கள் 9 பேர் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சீன அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே “ஆப்கானிஸ்தானின் சதி திட்டத்தால் பேருந்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட வாகனம் தான் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது.

இந்த தாக்குதலின் பின்னணியில் ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகமும் (என்டிஸ்), இந்தியாவின் ரா உளவு அமைப்பும் உள்ளது. இந்த இரண்டு அமைப்புகளுக்கும் ரகசிய தொடர்பு கொண்டவை” என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது தெரிவித்துள்ளார்.

Categories

Tech |