Categories
தேசிய செய்திகள்

90% பொருளாதாரா மந்த நிலை….. கடும் வீழ்ச்சி….. இந்தியாவுக்கு சர்வதேச பண நிதியம் எச்சரிக்கை….!!

இந்த ஆண்டில் 90 சதவிகித நாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என கூறியுள்ள சர்வதேச பண நிதியம் இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின்  வாஷிங்டன் அமைந்துள்ள சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் அதன் பொது இயக்குனரான கிறிஸ்டினா ஜியாஜீவா உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் உலக பொருளாதாரம்  ஒருங்கிணைந்த மந்த நிலையை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர், அமெரிக்கா சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தக போர் தான் இதற்கு காரணம் என்று கிருஸ்டளின ஜியாஜீவா தெரிவித்துள்ளார். உலக அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறையப் போகிறது என்றும்  அவர் அவர் கணித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,

Image result for பொருளாதார வீழ்ச்சி

ஜப்பான் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பொருளாதார நிலை இயல்பாக இருக்கும் என்றும் பிரேசில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார மந்தநிலை இந்த ஆண்டில் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ள அவர், சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகமும் படிப்படியாக குறையும் என்றும்  கணித்துள்ளார். மேலும் பொருளாதார மந்த நிலையை தவிர்க்க வேண்டும் என்றால் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து வர்த்தக திறனை பெருக்க வேண்டும் என்று அவர் அறிவுரை கூறியுள்ளார்.

Categories

Tech |