இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டுக்குச் சென்று அவருக்கு எம்.பி சு.வெங்கடேசன் ஆதரவு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒலிம்பிக் விளையாட்டுகள் மூலமாக சர்வதேச அரங்கில் இந்திய கொடியைப் பறக்க விட்டு திரும்பியிருக்கிறார்கள் ஹாக்கி பெண் வீரர்கள்.
வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், இதயங்களை அள்ளி வந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு தேடித்தந்த பெருமைக்காக நன்றி தெரிவித்ததாகவும், அவருடனான உரையாடல் மிகுந்த மனநிறைவு தந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது வெற்றி தேசத்தின் வெற்றி. இதுதான் வந்தனாவுக்கு நான் சேதி. வாழ்த்துக்கள் வந்தனா.. காலம் உங்கள் கையில் என கூறியுள்ளார்.