இந்தோனேஷியாவில் ராணுவத்தில் சேரும் பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ராணுவத்தில் சேரும் பெண்களின் கன்னித்தன்மையை சோதனை மேற்கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனிடையே உலக சுகாதார அமைப்பு கடந்த 2014ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நெறிமுறைகள கருத்தில் கொண்டு கன்னித்தன்மை சோதனை அறிவியல் அடிப்படையில் இல்லை என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ராணுவத் தளபதி ஆண்டிகா பெர்காசா ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை கிடையாது என்றும் அவர்களின் உடல் பயிற்சி திறன் மட்டும் சோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் உயிருக்கு ஏற்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு நிறக்குருட்டுத்தன்மை மற்றும் அவர்களின் முதுகெலும்பு மற்றும் இதய நிலை ஆகியவை மட்டும் சோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் இந்த முடிவு மனித உரிமை அமைப்பிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.