தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள, சிறந்த பல்கலைகளில், தமிழ் இருக்கைகள் அமைக்க, தமிழ் வளர்ச்சித் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவின் ஹார்வர்டு, ஜெர்மனியின் கொலோன், கனடாவின் டொரோன்டோ பல்கலைகளில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், மற்ற பல்கலைகளிலும், அந்தந்த நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, தமிழ் இருக்கையை நிறுவும் முயற்சியில், தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது. இதனால், பழந்தமிழர்களின் கடல் கடந்த வணிகம், பண்பாடு, கலை, இலக்கியம் பற்றிய புரிதல், உலக மக்களுக்கு ஏற்படும்.இதற்கு பொதுமக்கள் அனைவரும் வாழ்த்து மற்றும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.