Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீடுகள் கட்டி தர வேண்டாம்… அதிகாரிகளை தடுத்த தூய்மை பணியாளர்கள்… நகராட்சி கமிஷனர் பேச்சுவார்த்தை…!!

வீடுகள் கட்டித்தர தருவதற்கு பதிலாக பட்டா வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நகராட்சி கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் நெடுஞ்சாலை பகுதியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு வீடு கட்டித்தர அரசு 2007ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்துள்ளது. ஆனால் அப்பகுதியில் வசிப்பவர்கள்  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் கட்டித்தர வேண்டாம் என்றும், இடத்திற்கான பட்டா வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்து தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும், பட்டா வழங்க கூடாது என நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில் குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் கதிரேசன், வளர்மதி ஆகியோர் தலைமையில் போடி நகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் குடியிருப்புக்கு சென்றுள்ளனர். அப்போது அதிகாரிகளை உள்ளே வர விடாமல் அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு பின் அவர்களை போடி நகராட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் தூய்மை பணியாளர்கள் ஓய்வு பெரும் வரை இருந்துகொள்ளலாம் எனவும், பணியில் இருந்து நிறைவு பெற்றதும் வீட்டை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு பணியாளர்கள் எங்களுக்கு வீடுகள் வேண்டாம் பட்டா தான் வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். இதனால் நகராட்சி கமிஷனர் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |