பிரிட்டனில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 வயது குழந்தை உட்பட ஆறு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்திலுள்ள Plymouth என்ற பகுதியில் நேற்று மாலை நேரத்தில், 23 வயது இளைஞர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 5 வயது குழந்தை உள்பட 6 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய இளைஞரும் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Jake Davison என்ற நபர் தான் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார் என்றும், அவர் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தின் போது, அந்த நபர் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் ஆடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பின், அந்த நபர் பூங்காவிற்கு தப்பி சென்றதாகவும் அங்கு இருந்தவர்களையும் துப்பாக்கியால் சுட்டதாகவும் சிலர் கூறியுள்ளார்கள். எனவே, காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.