கனடாவின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையின் போது தடைசெய்யப்பட்ட ரசாயனம் 1500 கிலோ மாட்டியுள்ளது.
கனடா அதிகாரிகளிடம் மாட்டியது, Fentanyl என்ற போதைப்பொருள் தயாரிக்கக்கூடிய ரசாயனம். அவை அதிகாரிகளிடம் சிக்காமல் இருந்திருந்தால், சுமார் 2 பில்லியன் டோஸ் போதை மருந்துகள் விற்பனை செய்யப்பட்டிருக்கும். அதிகாரிகள் கப்பல்களில் வந்த கண்டெய்னர்களை சோதனை செய்து வந்துள்ளனர்.
அப்போது ஒரு கண்டெய்னரில் வீட்டிற்கு தேவையான பொருட்களின் இடையில் 1500 கிலோ எடையில் 4-Piperidone என்ற தடை செய்யப்பட்ட ரசாயனம் மறைக்கப்பட்டிருந்தது. அதனை அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். இல்லையெனில், அந்த போதைப்பொருள்கள், கனடாவின் பல்வேறு தெருக்களுக்குள் விற்கப்பட்டு, இளைஞர்கள் பலரின் வாழ்க்கையை சீரழித்திருக்கும். நல்ல வேளையாக பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது.