சரவணபவன் ஹோட்டல் பருப்புப்பொடி
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு – 50 கிராம்
துவரம்பருப்பு – 75 கிராம்
உளுந்தம்பருப்பு – 50 கிராம்
பொட்டுக்கடலை – 100 கிராம்
வரமிளகாய் – 5
மிளகு – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் ஒரு கடாயில் பருப்புகளை போட்டு தனித்தனியே வறுத்துக்கொள்ள வேண்டும் . பின் மிளகு , வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் ஆறியதும் பொட்டுக்கடலை, பெருங்காயத்தூள் , உப்பு மற்றும் வறுத்தெடுத்த பொருட்கள் சேர்த்து அரைத்தெடுத்தால் சுவையான பருப்புப்பொடி தயார் !!!