Categories
உலக செய்திகள்

இனி இறைச்சி விலை தாறுமாறாக குறையும்…. மக்களை வியப்பில் ஆழ்த்தும் புதிய தொழில்நுட்பம்…..!!

இஸ்ரேலை சேர்ந்த அல்போன்ஸ் என்ற உணவு நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து மாட்டிறைச்சியை வெற்றிகரமாக வளர்த்து காட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது.

மாட்டு இறைச்சியை  வளர்த்து காட்டும் முயற்சியில் இறங்கிய இஸ்ரேலைச் சேர்ந்த என்ற அல்போன்ஸ் என்ற உணவு நிறுவனம் ரஷ்யாவைச் சேர்ந்த3d  பிரின்டிங் நிறுவனத்துடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டது. அந்த வகையில் பசுவிலிருந்து செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு சிறந்த ஊட்டச்சத்துக்கள் வழங்கப்பட்டு வளர்ச்சி பெற ஏதுவான சூழல்களில் செல்கள் வைக்கப்பட்டு பெருக்கம் அடைய வைக்கப்பட்டன.

Image result for இறைச்சி

இறுதியில் அவை முழுமையான மாமிசமாக உருவாகும் தன்மையை பெற்றன. 3d பிரின்டிங் உருவாக்கிய 3டி பிரிண்டர் தொழிநுட்பம் இதில் முக்கிய பங்காற்றியது. இது குறித்து தெரிவித்துள்ள 3d பிரின்டிங் சொல்யூஷன் நிறுவனம் இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளதால் விண்வெளி பயணங்களின்போது விண்வெளி வீரர்களுக்கு உணவு அளிக்க வழிவகை செய்யும் சூழல் உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் பூமியில் உணவு பற்றாக்குறை அபாயத்தை போக்கவும் இதன் மூலம் வழி கிடைத்துள்ளதாக அந்நிறுவனம்  குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |