அஸ்வின் நடிப்பில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது .
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் அஸ்வின். இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வரை சென்று சிறப்பாக சமைத்து மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அஸ்வினுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி தற்போது இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார்.
ரொமான்டிக் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார். இந்நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.