விஜய் சேதுபதி மீண்டும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இதுவரை விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக நடிக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி தெலுங்கில் உப்பென்னா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது .