நயன்தாரா நடிப்பில் ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ரூ.15 கோடிக்கு விலை போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் பல திரில்லர் படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் மிலிண்ட் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் “நெற்றிக்கண்” எனும் திரில்லர் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை ரவுடி பிக்சர்ஸ் மூலம் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
மேலும் இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் ரூபாய் 15 கோடிக்கு “நெற்றிக்கண்” திரைப்படம் விலை போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.