அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிரித்திவிராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். தற்போது இந்த படத்தின் தெலுங்கு உரிமையை நாகவம்சி கைப்பற்றியுள்ளார். சாகர்.கே.சந்திரா இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
Power Storm is set to takeover with the Title & First Glimpse on 15th August from 09:45AM 💥
ఈసారి మాములుగా ఉండదు మరి, పూనకాలే 🔥🌪#BheemlaNayak @pawankalyan @RanaDaggubati #Trivikram @MenenNithya @MusicThaman @saagar_chandrak @dop007 @NavinNooli @SitharaEnts pic.twitter.com/9lBvcUnofX
— Naga Vamsi (@vamsi84) August 13, 2021
மேலும் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் டைட்டில் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலை 9:45 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.