தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தணிகை போளூர் பகுதியில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் தீபிகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தீபிகா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தீபிகா அப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார்.
இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து தீபிகாவை உடனடியாக மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் தீபிகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அரக்கோணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.