Categories
மாநில செய்திகள்

ஜெ. மரணம் தொடர்பான வழக்கு… 90% முடிவடைந்தது… ஆறுமுகசாமி ஆணையம் அறிவிப்பு…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பாக சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள்,  ஐபிஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் என 150 பேரிடம் இந்த ஆணையம் விசாரணை செய்தது. இதையடுத்து கடந்த ஜூலை 23ஆம் தேதி ஆறுமுகம் தலைமையிலான ஆணையத்திற்கு மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை 90% முடிந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்த வழக்கில் ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாக தமிழக தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |