தாலுகா அலுவலகத்தின் பின்புறம் நிறுத்தி வைக்கபட்டிருந்த படகு மற்றும் ஜீப் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தாலுகா அலுவலகத்திற்கு பின்புறம் பேரிடர் கால மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் ஒரு படகு மற்றும் பயன்படாத ஜீப் இரண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஜீப்பில் தீடிரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ சட்டென ஜீப்பிற்கு அருகில் இருந்த படகு மற்றும் மரமும் எரிந்துள்ளது.
இதனையடுத்து சில நிமிடங்களிலேயே படகு மற்றும் ஜீப் முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் தாசில்தார் ரவிசந்திரன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீ கட்டிடங்களிலும் பரவுவதற்கு முன் தீயை கட்டுபடுத்தியுள்ளனர். மேலும் தகவலறிந்து சென்ற ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் தீ பரவியதற்கான காரணம் குறித்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.