தமிழகத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் 250 தனியார் பள்ளிகள் விரைந்து அங்கீகாரத்தை பெறுமாறு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இன்றி செயல்பட்ட 2000 மெட்ரிக் பள்ளிகளில் 1750 பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், இவற்றில் 250 தனியார் பள்ளிகள் என்னும் அங்கீகாரம் பெறாமல் இருந்துவரும் வருகின்றனர். இதையடுத்து அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் 250 பள்ளிகள் விரைந்து அங்கீகாரம் பெற வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதியுடன் 1750 மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் பெற்ற தற்காலிக அங்கீகாரம் முடிவடைய உள்ளதால் அங்கீகாரம் நீட்டிப்பு கோரிக்கையை பள்ளிகள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.