Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடுப்பில் சொருகிய கத்தி…. வயிற்றை கிழித்ததால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்….!!

சென்னை அயனாவரத்தில் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை அவசரத்தில் எடுத்தபொழுது அடிவயிற்றில் அறுபட்டு இளைஞர் உயிரிழந்தார்.

சென்னை  வில்லிவாக்கத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை விட்டுப் பிரிந்த மனைவி சபிதா அயனாவரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அங்கு சென்ற மனோகரன் மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் சரிதாவின் சகோதரரியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட புகாரின் பேரில் அங்கு காவல்துறையினர் சென்றதும் மனோகரன்  தப்பி ஓடிவிட்டார்.

Image result for கத்தி

காவல்துறையினர் அங்கிருந்து சென்ற பிறகு மீண்டும் மனோகரன் தகராறில் ஈடுபடவே அதே பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவரை சரிதாவின் தாய் உதவிக்கு அழைத்தார். அங்கு சென்ற ராகவேந்திராவிற்கும் மனோகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மனோகரன் ராகவேந்திராவை தாக்க தனது இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை வேகமாக உருவினார். இதில் அவரது அடிவயிற்றை கத்தி பதம் பார்த்து விட்டது. பின்னர் ராகவேந்திராவின் மார்பில் குத்திவிட்டு மனோகரன் சரிந்து விழுந்து உயிரிழந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ராகவேந்திராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |