Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 1,௦௦,௦௦௦…. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்…. பெண்களுக்கு வழங்கபட்ட பிரசாத பொருட்கள்….!!

ஆடிப்பூரம் காரணத்தினால் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் 1,௦௦,௦௦௦ வளையல்கள் அணிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அமைச்சார் அம்மன் வீதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இக்கோவிலில் ஆடிப்பூரத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதனால் அம்மனுக்கு இளநீர், தயிர், சந்தனம், பன்னீர் மற்றும் பால் போன்ற பல வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து அம்மனுக்கு வளைகாப்பு விழாவும் நடைபெற்றுள்ளது. அதன் பின் அம்மனுக்கு 1,௦௦,௦௦௦ எண்ணிக்கை கொண்ட வளையல்கள் அணிந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர். மேலும் பிரசாதமாக மஞ்சள் கயிறு, குங்குமம் மற்றும் வளையல்கள் பூஜையில் கடந்து கொண்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |