Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித்துடன் இணையும் விக்ரம்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

பா.ரஞ்சித் அடுத்ததாக இயக்கும் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார்.

Happening heroine in Pa Ranjith's next? - Tamil News - IndiaGlitz.com

மேலும் சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் பா.ரஞ்சித் நடிகர் விக்ரமுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்புகள் நிறைவடைந்த பின் விக்ரம் நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் இயக்குவார் என கூறப்படுகிறது. தற்போது நடிகர் விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன், சியான் 60 ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Categories

Tech |