பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் சின்னராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது ரேவதி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் ரேவதி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அரக்கோணம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரேவதியின் உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.