தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவியை அறிவித்தது. இந்த நிவாரணத்தொகை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு (ஆகஸ்ட் 14ம் தேதி) நாளை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை நாட்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் அவசியம் குறித்து பயிற்சி அளிக்குமாறு ஆணையிட்டுள்ளது.