தனுசு ராசி அன்பர்களே.! எதையும் யோசித்துச் செய்ய வேண்டும்.
இன்று சந்தோஷ எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். மனதிற்கு பிடித்தவரை சந்திக்கக்கூடிய சூழல் இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து கொடுக்கும் சூழல் இருக்கும். எதையும் திறம்பட செய்ய முடியும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். மனதில் ஒருவித சந்தோஷம் இருக்கும். புதிய எண்ணங்கள் உருவாகும். தாராள பணவரவு இருக்கும். பெண்கள் வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். ஆடம்பரப் பொருட்கள் சேர்ந்துவிடும். புத்திகூர்மை சேர்ந்துவிடும். உற்சாகத்திற்கு குறைவிருக்காது. வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் சிறப்பாக நடக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டும்.
காதலில் உள்ளவர்கள் எதையும் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். காதல் கண்டிப்பாக கைகூடும். பிரச்சனையாக இருந்த காதல் கூட முன்னேற்றத்தை கொடுக்கும். பொறுமையாக செயல்பட்டு காதலை நீங்கள் சாதித்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். கல்விக்காக எடுக்கக்கூடிய முடிவுகளில் முன்னேற்றம் இருக்கும். தடைகளை உடைத்தெறிந்து மாணவர்கள் கல்வியில் முன்னேறிச் செல்ல முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பிரவுன் மற்றும் ஆரஞ்சு