Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”கருவை கலைத்து விடு” என்றதால் கொன்றேன் …. 6 வயது மகளை கொன்ற 2_ஆவது மனைவி ….!!

கருவை கலைத்து விடு என்று கணவன் சொன்னதால் 6 வயது மகளை 2_ஆவது மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த செம்பாக்கம் சக்கரபாணி தெருவை சேர்ந்தவர்  பார்த்திபன். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முதல் திருமணத்தில் பிறந்த ராகவி என்ற 6 வயது மகள் உள்ளார். முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சூரியகலா என்கின்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். சூரியகலாவுக்கும் பார்த்திபனுக்கும் இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. முதல் மனைவி மூலமாக பிறந்த  ராகவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இரண்டாவது திருமணம் ஆனதில் இருந்தே ராகவி மீது கோபம் கொண்ட சூரியகலா வெறுப்பை கடைபிடித்து வந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் சிறுமி ராகவி பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். நேற்று வெளியூருக்குச் சென்றிருந்த நிலையில், தனது சித்தியுடன் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு மணி நேரம் ராகவியை  காணவில்லை என்றும் அவரை தேடி வருவதாகவும் தனது கணவருக்கு தகவல் அளித்துள்ளார். உடனே வீட்டிற்கு வந்த பார்த்திபன் ராகவியை தேடியுள்ளார். அப்போது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து பார்த்த போது வீட்டின் பின்புறம் ராகவி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பார்த்திபன். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். முதலில் சிறுமி மாடியில் விளையாடி கொண்டிருந்த போது தவறி விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் மாடியிலிருந்து கீழே விழுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் ராகவி மீது சூரியகலா வெறுப்பை வெளிப்படுத்தி வந்ததையும் அருகில் உள்ளவர்கள் காவல்துறையினரிடம்  கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சூர்ய கலாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தனது கணவனின் முதல் மனைவி குழந்தை ராகவி மீது கொண்ட வெறுப்பு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனியாக இருந்த சிறுமியின் தலையில் டைல்ஸ் கல்லால் அடித்ததாகவும், சிறுமி மயக்கமடைந்த நிலையில் தூக்கி சென்று மூன்றாவது மாடியிலிருந்து புதரில் வீசி எறிந்ததாகவும் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து சூர்ய கலாவை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் கொலை செய்ததற்கான காரணமாக அவர் கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தான் இரண்டாவது முறை பார்த்திபனால் கருவுற்றதாகவும் அப்பொழுது ஏற்கனவே இரண்டு குழந்தை உள்ளது. மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று அந்த குழந்தையை கலைக்க சொன்னதாலும் ஆத்திரமடைந்து ராகவியை கொலை  செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Categories

Tech |