Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்னும் ஒரு மணி நேரத்தில்…. முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாட்டில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழக அரசு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் வேளாண்மை துறைக்காக தனி பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவைக்கு அளிப்பார்.

இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைத் தொடர்ந்து வேளாண்மை துறை, தனி முக்கியத்துவம் பெறும் துறையாக மாறிவிடும். அந்த துறையின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறைகளை அந்தத் துறையே வகுத்துக்கொள்ளலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இதுவும் முதல்முறை பட்ஜெட்டாக அமைகிறது. இந்த பட்ஜெட் விவசாயிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்னும் ஒரு மணி நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

Categories

Tech |