Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழ்நிலை…. ஸ்விட்சர்லாந்தின் அதிரடி முடிவு….!!

ஆப்கானிஸ்தானில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களால் அந்நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு தங்களது ஊழியர்களை திரும்பப்பெற சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் அந்நாட்டில் செலுத்தி வருகிறார்கள். மேலும் இவர்கள் அந்நாட்டிலுள்ள பல பகுதிகளையும் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள்.

இதனால் ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு அந்நாட்டில் பணிபுரியும் தங்களது பணியாளர்களை 50% திரும்ப பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் தங்கள் நாட்டின் 3 பணியாளர்களை திரும்பப் பெறுவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |