விருதுநகரில் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் வெம்பக்கோட்டை பகுதியில் தாசில்தார் அனந்தனராயன் உத்தரவின் பேரில் துணை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் சோதனை செய்துள்ளனர்.
அங்கு முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இந்த சோதனையின் போது ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர், ஆலங்குளம் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் உடனிருந்துள்ளனர்.